பெண்களுக்கு எதிரான குற்றங்களை தெரிவிக்க உதவி மையம் திறப்பு
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பதிவு செய்ய பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் , மற்றும் பெரம்பலூர் நகர காவல் நிலையம் . மங்கலமேடு பாடாலூர் ஆகிய நான்கு காவல் நிலையங்களில் உள்ளடக்கி 4 இரு சக்கர வாகனங்கள் 4 மடிகணினியுடன் தயார்நிலை படுத்தப்பட்டுள்ளன,
இதில் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு 112 மற்றும் 181 ஆகிய இரண்டு எண்களிலும் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தால் உடனடியாக அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று தேவையான அனைத்து உதவிகளும் மற்றும் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் வகையில் இந்த அமைப்பு செயல்படும்,
மேலும் நிகழ்ச்சியில் இதுகுறித்த அணுகுமுறைகள் பற்றிய விளக்கங்களை காவல்நிலைய ஆய்வாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவிக்கையில் பெண்களுக்கு உண்டான இந்த அமைப்பு தமிழகம் முழுவதும் 8 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளன மேலும் இதில் உள்ள உதவி எண்களை தொடர்பு கொண்டு பெண்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அடுத்ததாக இணைய வழியில் நடைபெறும் மோசடிகள் மற்றும் ஏமாற்றுபவர்கள் அதிகமாக நடைமுறையில் உள்ளன,
இணையதளம், வாட்ஸ் அப், டெலிகிராம், இன்ஸ்டகிரம். பேஸ்புக் ஆகியவற்றில் வரும் விளம்பரங்களைப் பார்த்து பொருட்களையும் ஆர்டர் செய்வது அதற்காக பணத்தை இழக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது,
மேலும் இணையம் மற்றும் செல்போன் அழைப்புகள் . குறுஞ்செய்தி வழியாக தகவல் அனுப்பி கடன் வழங்கப்படும் என்று சொல்லி ஏமாற்றி வங்கி கணக்குகள் ஓடிபி ஆகியவற்றை மிகவும் சாமர்த்தியமாக பேசி வாங்கி விடுவதால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போகின்றன
இதில் மிகுந்த கவனத்துடன் கையாண்டு இந்த மாய வலையில் யாரும் விழ வேண்டாம், கவனமுடன் இருக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியின்போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கிய பிரகாசம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நீதிராஜ் , பெரம்பலூர் சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் இந்தோ அறக்கட்டளை நிர்வாகிகள், ஆய்வாளர்கள் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu