பெரம்பலூர் மாவட்டத்தில் யூரியா, டிஏபி கிடைக்கவில்லை : விவசாயிகள் மனு
தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சி மற்றும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்..
தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சி மற்றும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சி மற்றும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் விஸ்வநாதன் தலைமையில், மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இதில், உரம் தட்டுப்பாடு போக்கப்படும் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கூறினார், ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் யூரியா, டி ஏபி இதுவரை கிடைக்கவில்லை தட்டுப்பாடு நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
பயிர் கடன், நகை கடன் தள்ளுபடி செய்தவர்களுக்கு அதற்கான சான்று வழங்க வேண்டும், பயிர் கடன் கேட்கும் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
மக்காச்சோளத்தில் படைபுழு தாக்குகிறது. கட்டுப்படுத்த வேண்டும், அதுபோல பருத்தியில் பூ கொட்டுகிறது, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,
மேலும் மக்காச்சோளம், பருத்தி இவைகள் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிற்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை குறிப்பிடப்பட்ட மனுவினை மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பெரம்பலூர் வந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோரிடம் மனுவை வழங்கினர்,
இந்த மனு வழங்கும் நிகழ்ச்சியின் போது சங்கத்தின் மேலப்புலியூர் கிளை தலைவர் ராமதாஸ், செயலாளர் செல்லமுத்து நாவலூர் கிளைத் தலைவர் முத்துசாமி பிரதிநிதிகள் ராஜேந்திரன், பெருமாள் உள்ளிட்ட விவசாயிகள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu