பெரம்பலூரில் வாகனம் மோதி இரண்டு குரங்குகள் பலி:அடக்கம் செய்த போலீசார்

பெரம்பலூரில்  வாகனம் மோதி இரண்டு குரங்குகள் பலி:அடக்கம் செய்த போலீசார்
X

 சாலையில் அடிபட்டு இறந்த குரங்குகளை அடக்கம் செய்த பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து எண் 1 காவல்துறையினர்.

பெரம்பலூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் இரண்டு குரங்குகள் இறந்தன. இறந்த குரங்குகளை போலீசார் நல்லடக்கம் செய்தனர்.

சாலையில் விபத்துக்குள்ளான மனிதனையே கடந்துசெல்லும் மனிதர்களின் மத்தியில் பெரம்பலூர் மாவட்டம் போலீசாரின் செயல் அனைவரின் பாராட்டையம் பெற்றது.

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் பிரிவு ரோடு அருகே சாலையில் அடிபட்டு இறந்து கிடந்தன.

இரண்டு குரங்குகளை பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எண்-1 காவல்துறையினர் சிறப்பு உதவி ஆய்வாளர் இளவரசன் மற்றும் முதல் நிலை காவலர்கள் சங்கரபாண்டியன் அருண் ஆகியோர்கள் மீட்டு அருகிலேயே குழி தோண்டி அடக்கம் செய்தனர். இந்த செயல் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

நெடுஞ்சாலை ரோந்து பிரிவு காவல்துறையினரின் செயலினை அறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி மேற்படி காவல்துறையினரை பாராட்டினார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி