பெரம்பலூர் கனிம வள அலுவலகத்தை டிப்பர் லாரி உரிமையாளர்கள் முற்றுகை

பெரம்பலூர் கனிம வள அலுவலகத்தை டிப்பர் லாரி உரிமையாளர்கள் முற்றுகை
X

ஏரி குளங்களில் வண்டல் மண், கிராவல் மண் எடுக்க அனுமதி மறுத்ததை கண்டித்து,  கனிமவள, உதவி இயக்குர் அலுவலகத்தை டிப்பர் லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனிம வள அலுவலகத்தை, டிப்பர் லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில், வண்டல் மண் மற்றும் கிராவல் ஆகியன எடுக்கப்பட்டு வந்தநிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல், கிராவல் மண் எடுப்பதற்கு கணிமவள துறைமூலம் தடை விதிக்கப்பட்டது. இதனால், கிராவல் மண் லாரிகளில் கொண்டு சென்று பிழைப்பு நடத்தும் டிப்பர் லாரி உரிமையாளர்கள், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

மேலும், கிராவல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து, கடந்த மாதம் மனு அளித்தனர் இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா கிராவல் மண் எடுப்பதற்காக கனிமவளத்துறை உதவி இயக்குனரிடம் பரிந்துரை செய்தார். எனினும், கனிமவளத்துறை உதவி இயக்குனர், அனுமதி மறுத்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், 50க்கும் மேற்பட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள், தங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது; கிராவல் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி, பெரம்பலூர் கனிமவள அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர். அத்துடன், அலுவலகம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணிநேரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உதவி இயக்குனர், மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தைக்கு பின் அனுமதி குறித்த தகவல் தெரிவிப்பதாக கேட்டுக் கொண்டதன் பேரில், தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி