பெரம்பலூர் அருகே உறவினர் வீடடில் பணம் திருடியதாக தாக்கப்பட்டதில் சிறுமி உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே உறவினர் வீடடில் பணம் திருடியதாக  தாக்கப்பட்டதில் சிறுமி உயிரிழப்பு
X

சிறுமி உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே உறவினர் வீட்டில் பணம் திருடியதாக தாக்கப்பட்டதில் சிறுமி உயிரிழந்தார். இது குறித்து தாய் மற்றும் உறவினரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர்குப்பத்தை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி மணிமேகலை. இவர்களது மகள் இதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிறுமி கடந்த 6 ம் தேதி தனது வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து 70 ரூபாய் பணத்தை தெரியாமல் எடுத்துச் சென்று செலவு செய்ததாக கூறப்படுகிறது.

இது தெரிந்த அவரது தாய் மணிமேகலையும் உறவினர் மல்லிகா என்பவரும் சேர்ந்து சிறுமியை பணம் திருடலாமா? எனக்கூறி நெருப்பில் மிளகாயைப் போட்டு அந்தப் புகையை சுவாசிக்க வைத்ததாகவும், கால் மற்றும் வாய்ப்பகுதியில் சூடு வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் துடி துடித்த சிறுமி மயக்கமடைந்ததுடன் அவருக்கு பலத்த உடல்நிலைக்கோளாறு ஏற்பட்டுள்ளது,

இதனால் அவரை பெற்றோர் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர், அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,

இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிந்து சிறுமியின் சாவிற்கு காரணமான தாய் மணிமேகலை அவரது உறவினர் மல்லிகா ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!