இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது

இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது
X

7 லட்சம் மதிப்புள்ள நகை வெள்ளி பொருட்கள் 

7 லட்சம் மதிப்புள்ள நகை வெள்ளி பொருட்களை அதிரடியாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறையினருக்கு பாராட்டு.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அல்லிநகரம் கிராமத்தில் கடந்த ஜூன் 8-ந்தேதி அன்று அதிகாலை வயதான தம்பதியான பெரியசாமி அவரது மனைவி அறிவழகி வீடு புகுந்து தாக்கி கொடூரமாக இருவரையும் கொலை செய்து, வீட்டிலிருந்த 16 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், டிவி உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

நகைக்காக நடந்த இரட்டை கொலை சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மணி அறிவுறுத்தலின் படி இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் குற்ற வழக்கில் தொடர்புடைய சந்துரு, மகேஷ், யுவராஜ் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் முதலில் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து குற்றவாளிகளை விசாரித்ததில் ஏற்கனவே இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும், விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான அப்பு, சத்யா, மணிகண்டன் ஆகிய மூவர் என மொத்தம் 6 பேரை இந்த இரட்டை கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடமிருந்து 16 பவுன் நகை, வெள்ளி கொழுசு, பணம், எல்.இ.டி டிவி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து இன்று பெரம்பலூர் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் மகளான சத்யாவிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி ஒப்படைத்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக துரிதமாக செயல்பட்ட தனிப்படை குழுவினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!