பெரம்பலூரில் தற்காலிக மருந்தாளுநர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
மாதிரி படம்.
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் மருந்தாளுநர் பட்டயப்படிப்பு முடித்து மருந்தாளுநர் கவுன்சிலில் பதிவு செய்திருப்பதோடு வருடம்தோறும் விடுபடாமல் பதிவு புதுப்பித்திருக்க வேண்டும்.
பட்டயபடிப்பு சான்றிதழ், கல்விச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் நகல் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், துறைமங்கலம் நான்கு ரோடு, பெரம்பலுர் என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 05.08.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்திட வேண்டும்.
இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. எக்காரணம் முன்னிட்டும் பணிவரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்படமாட்டாது. விண்ணப்பித்தவர்களுக்கு 10.08.2021 அன்று காலை 09.30 மணி முதல் பெரம்பலூர் துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும். இது குறித்து மேலும் விபரங்களுக்கு 89031 24553 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu