திரிபுரா வன்முறை சம்பவத்தை கண்டித்து பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திரிபுரா மாநில த்தில் நடந்த வன்முறையை கண்டித்து , நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் திரிபுரா அரசு மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
திரிபுரா மாநிலத்தில் நடந்த வன்முறையை கண்டித்து, நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் திரிபுரா அரசு மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தில் கடந்த அக்டோபர் -26 ம் தேதி பேரணி சென்ற விஹெச்பி, பஜ்ரங்தள் அமைப்பினர் அங்குள்ள முஸ்லிம் குடியிருப்புகள் மற்றும் 16 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை தீக்கிரையாக்கியுள்ளனர். இது குறித்து எந்த ஒரு குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை. மாறாக பாதிக்கபட்ட இஸ்லாமியர்கள் தரப்பிலேயே கைது நடவடிக்கையை தொடர்ந்துள்ளது எனவே திரிபுரா காவல்துறையை கண்டிக்கும் விதமாகவும், .பாதிக்கபட்ட மக்களுக்கு நீதிவேண்டி பாப்புலர் ஃப்ரண்ட் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்களை நடத்தி வரும் நிலையில்,
பெரம்பலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,மாவட்ட செயலாளர் முபாரக் அலி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில். பெரம்பலூர் ஏரியா தலைவர் ரபீக் வரவேற்று பேசினார். இதனையடுத்து திரிபுரா அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை,முகமது அன்சாரி ,Sdpi மாவட்ட தலைவர், முஹமது இக்பால், கிருஸ்துவ நல்லெண்ண இயக்கம் மாவட்டசெயலாளர், ரினோ பாஸ்டின்,மக்கா பள்ளி வாசல், இமாம், அப்ராருல் ஹக்ரஷாதி, பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர்செய்யது அபுதாகீர், பெரம்பலூர் ஏரியா செயலாளர் அகமது இக்பால் உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu