பெரம்பலூர் மாவட்டத்தில் 17-ம் தேதி பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் (பைல் படம்)
வருவாய்த்துறை அமைச்சர் தமிழக சட்டப்பேரவையில் "விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்துதல், அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் இவ்வரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு 2022 பொங்கல் திருநாளுக்குள் அனைத்து கிராம மக்களும் பயன்பெற வழிவகை செய்யப்படும்" என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இணையவழி தமிழ்நிலம் மென்பொருள் பதிவுகளில் ஏற்பட்ட எளிய பிழைகளை திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் 17.11.2021 அன்று பெரம்பலூர் வட்டத்தில் செங்குணம் வருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு செங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை வட்டத்தில், பூலாம்பாடி(கிழக்கு), பூலாம்பாடி(மேற்கு) வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு பூலாம்பாடி பேரூராட்சி அலுவலகத்திலும், குன்னம் வட்டத்தில அத்தியூர்(வடக்கு), அத்தியூர்(தெற்கு) வருவாய் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு அத்தியூர் கிராம நிருவாக அலுவலர் அலுவலகத்திலும், ஆலத்தூர் வடடம், சிறுவயலூர் வருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறுவயலூர் புதுவாழ்வுத்திட்ட அலுவலகத்திலும் இம்முகாம் நடைபெற உள்ளது.
எனவே இந்த சிறப்பு முகாமினை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu