பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீசாரால் நடத்தப்பட்டது.

பெரம்பலூர் அருகே செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அரசு காவல்துறை போக்குவரத்து பிரிவு சார்பில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் டெய்சிராணி தலைமையில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுப்பையன் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை பற்றியும், அதை பின்பற்றுவதைப் பற்றியும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் பள்ளி அளவில் சாலை பாதுகாப்பு குறித்து நடைப்பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கி வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆசிரியர்கள் சுந்தரவடிவேல், திருநாவுக்கரசு, சீனிவாசன், சாந்தியம்மாள் , உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் , ஆசிரியர் சிவானந்தம் , உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்