/* */

இணையவழி தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை

இணையவழி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி அறக்கட்டளை சார்பில், கல்லூரியில் பயில கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

இணையவழி தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை
X

இனையவழி தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகையினை கல்லூரி தாளாளர் சீனிவாசன் வழங்கினார்.

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் 504 இடங்கள் உள்ளன. இக்கல்லூரி பாடப்பிரிவில் சேருவதற்கு கல்வி உதவித் தொகைக்கான இணையவழியாக தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்பதற்காக பெரம்பலூர், திருச்சி, கரூர், அரியலூர், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்பட 23 மாவட்டத்தைச் சேர்ந்த 7,706 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

அதன்படி, கல்லூரியில் இணைய வழியாக நடைபெற்ற தேர்வில் ப்ளஸ் 2 மற்றும் பாலிடெக்னிக் முடித்த 4,824 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இத்தேர்வில் 50 மதிப்பெண்கள் கொண்ட கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி அறக்கட்டளை சார்பில், இக்கல்லூரியில் பயில கல்வி உதவித்தொகையினை கல்லூரி தாளாளர் சீனிவாசன் வழங்கினார்.

Updated On: 20 July 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  2. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  3. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  4. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  5. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  10. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?