மக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் 107 மனுக்களுக்கு உடனடி தீர்வு

மக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் 107 மனுக்களுக்கு உடனடி தீர்வு
X

பெரம்பலூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் பொதுமக்கள் மக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் மனுக்களை பெறுகிறார்

பெரம்பலூர் மாவட்ட காவல் நிலையங்களில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற 116 மனுக்களில் 107 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உத்தரவின் பெயரில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர் அரும்பாவூர், விகளத்தூர், கைகளத்தூர், மங்களமேடு , குன்னம் பாடாலூர் ஆகிய காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் பெரம்பலூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலும் மங்களமேடு காவல் நிலையம் டிஎஸ்பி மோகன்தாஸ் தலைமையிலும் மற்றும் அந்தந்த காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற 116 மனுக்களில் 107 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது மீதமுள்ள 9 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது இந்த சிறப்பு குறைதீர் முகாமில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!