கொரோனோ தொற்று பரவல் தடுப்பு: பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி

கொரோனோ தொற்று பரவல் தடுப்பு: பள்ளி மாணவர்களுக்கு  விழிப்புணர்வு போட்டி
X

பள்ளிக்கல்வி துறை சார்பில் கொரோனோ வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பரர்வையிட்டார்.

ஒவியப்போட்டி கொரோனா விழிப்புணர்வு குறித்தபல்வேறு விழிப்புணர்வு போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கொரோனா தொற்று பரவல் மூன்றாவது அலையை தடுக்க தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக வலைதளங்கள் மற்றும் நேரடியாக விளம்பர சுவரொட்டிகள் வடிவமைப்பு, ஒவியப்போட்டி ரோனா விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டி என பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா (ஆகஸ்ட் 5 ) இன்று தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்று பரவல் தொடர்பாகவும், முக கவசம், கிருமி நாசினி பயன்படுத்துதல், மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. கொரோனோ விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதையொட்டி , மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,மாரி மீனால், குழந்தை ராஜன், நகராட்சி ஆணையர் குமரி மன்னன், மாவட்ட கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர்கள் சிதம்பரம், ராஜேந்திரன், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர் .

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!