/* */

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் புகைப்படக் கண்காட்சி.

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் புகைப்படக் கண்காட்சி.
X
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

தமிழக அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்று சேரும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தினந்தோறும் கிராம ஊராட்சிகளில் வீடியோ படக்காட்சிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் திரையிடப்பட்டு வருகிறது.

இது தவிர தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட அரசு விழாக்களின் தொகுப்பாக சிறு புகைப்படக்கண்காட்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலான புகைப்படக் கண்காட்சி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அன்னமங்கலம் ஊராட்சியில் நடத்தப்பட்டது.

இக்கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் ,அமைச்சர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். பார்வையிட்டவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Updated On: 27 Sep 2021 12:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்