வேப்பந்தட்டை அருகே கொரோனா கட்டுப்பாடு பகுதிகளை வட்டாச்சியர் திடீர் ஆய்வு

வேப்பந்தட்டை அருகே கொரோனா கட்டுப்பாடு பகுதிகளை வட்டாச்சியர் திடீர் ஆய்வு
X

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தடடையில் கொரோனா தடை செய்யப்பட்ட பகுதியை தாசில்தார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேப்பந்தட்டை அருகே கொரோனா கட்டுப்பாடு பகுதிகளை வட்டாச்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள அன்னமங்கலம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட வருகை தந்த வேப்பந்தட்டை வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் அன்னமங்கலம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமையில் இருந்து வரும் கொரோனா நோயாளிகளின் தெருக்களில் பயணதடை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளனவா கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளதா, மக்கள் முககவசம் அணிந்து வருகிறார்களா என்பதனை பார்வையிட்டார்.

மேலும் அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள விசுவகுடி, முகமதுபட்டினம் ஆகிய பகுதிகளை பார்வையிட்ட வட்டாச்சியர் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காலதாமதம் செய்யாமல் பணிகளை உடனுக்குடன் செய்ய வேண்டுமென கிராம அலுவலரிடம் அறிவுறுத்தினார். பின்னர் ஊரின் நுழைவு வாயிலில் தடுப்பு அமைத்து ஊரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!