பெரம்பலூர் மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆய்வு

பெரம்பலூர் மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆய்வு
X

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் தரேஸ் அகமது பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு பணிகள் மேற்கொண்டார். 

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் தரேஸ் அகமது நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகத்தின் சிறிய மாவட்டமான பெரம்பலூரில் கடந்த சில மாதங்களா அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கடுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் தரேஸ் அகமது பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதிகளை மருத்துவ அலுவலர்களிடம் கேட்றிந்து மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் பெரம்பலூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை தடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்த உளதாக தெரிவித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!