பெரம்பலூர்: இயற்கை முறையில் பயிரிடும் திராட்சை-குறைந்த விலைக்கு விற்கும் விவசாயி!
கொத்து கொத்தாக காய்த்து தொங்கும் திராட்சை.
பெரம்பலூர் மாவட்டம் எசனை பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் என்கிற சுருளிராஜன். விவசாயியான இவர் தனக்கு செந்தமான நிலத்தில் அரை ஏக்கரில் இயற்கை முறையில் திராட்சை பயிர் செய்திருந்தார். நன்கு வளர்ந்த திராட்சைகளை தற்போது அப்பகுதி மக்களுக்கு மலிவு விலைக்கு விற்பனை செய்து வருகிறார்.
தமிழகத்தில் பொதுவாக திராட்சை விளைச்சலுக்கு பேர்போன இடங்களாக விளங்கும் தேனீ, கம்பம் ஆகிய பகுதிகளை மிஞ்சும் அளவுக்கு பெரம்பலூரில் திராட்சை பயிர் புதுமையுடன் இயற்கை முறையில் பயிர் செய்யப்படுகிறது. இதனால் இதன் சுவையும் தனித்துவமாக இருப்பதாக ருசித்து பார்த்தவர்கள் நெகிழ்ந்து கூறுகின்றனர்.
இதுவரை அறுவடை செய்யப்பட்ட 3 டன் திராட்சை மூலம் தனக்கு 3 லட்சம் வரை லாபம் கிடைத்துள்ளது என்றும், இயற்கை முறையில் விவசாயம் செய்ய தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில் பெரும் லாபம் கிடைக்காமல் போனாலும் தற்போது ஊரடங்காலும், இயற்கை முறையில் பயிர் செய்த திராட்சையை வாங்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இது மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளதாக விவசாயி பெருமாள் தெரிவிக்கிறார்.
இயற்கை முறையில் திராட்சை பயிர் செய்து வரும் விவசாயி பெருமாளின் முயற்சிக்கு பெரம்பலூர் மாவட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையினர் வாழ்த்து தெரிவித்து இயற்கை முறை திராட்சையை ஊக்குவிக்கும் வகையில் உதவிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu