பெரம்பலூர் அருகே சாலை விபத்து: நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே  சாலை விபத்து: நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழப்பு
X

பைல் படம்.

லாரியின் நடுவே உள்ள தடுப்பு கம்பி மோதியதில் இருசக்கர வானத்தில் சென்ற மாணவி செல்வகுமாரி லாரியில் சிக்கி உயிரிழந்தார்

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குள்பட்ட, மூலக்காடு குக்கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி மகன் கார்த்திக்(23). இவரது தங்கை செல்வகுமாரி(18) . இவர்,பெரம்பலூரில் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு, தற்போது கல்லூரி திறந்திருப்பதால், கல்லூரி செல்வதற்காக கொரோனா பரிசோதனை செய்ய இன்று (செப்-6)காலை, அருகே பெரம்பலூருக்கு தனது சகோதரர் கார்த்திக்குடன் இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு இருவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, குரும்பலூர் மாரியம்மன் கோயில் அருகே சாலையில் எதிரே வந்த சிமெண்ட் லாரியின் பக்க வாட்டில் லாரியின் நடுவே உள்ள தடுப்பு கம்பி இருசக்க வானம் மீது மோதியது. இவ்விபத்தில், இருசக்கர வாகனத்தில் இருந்த செல்வகுமாரி, லாரியின் பின்பக்க டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார்த்திக் காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் காவல் நிலைய போலீசார், மாணவி செல்வகுமாரியின் உடலை மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குபதிந்து, லாரி ஓட்டுனர் கடலூர் மாவட்டம், சிறுவான்மியூர் பகுதியைச் சேர்ந்த அழகேசன்(45) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
how to bring ai in agriculture