டைப்ரைட்டிங் வகுப்புக்கு சென்ற கல்லூரி மாணவி மாயம்: பெற்றோர்கள் கலெக்டரிடம் மனு
மகளைக் காணவில்லை என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெற்றோர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் உள்ள கோவிந்தராஜபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ்- ராணி தம்பதியினருக்கு அட்சயா, அபிநயா என்ற இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதில் அபிநயா(18) வேப்பூர் அரசு கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்று வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி டைப்ரைட்டிங் வகுப்புக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். பலஇடங்களில் தேடி பார்த்ததில் கிடைக்கவில்லை. இதுகுறித்து குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குன்னம் போலீசார் விசாரணையில் முன்னேற்றமில்லை.
இதனிடையே பெற்றோர்கள் விசாரித்த போது, வேப்பூர் அருகே உள்ள கத்தாலை மேடு பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(19) என்பவருடன் சென்றுவிட்டதாக தகவல் தெரியவந்தது. இந்தத்தகவலை போலீசாரிடம் தெரிவித்த பிறகும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லையாம். இதையடுத்து, அபிநயாவின் பெற்றோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், புகார் மனு அளித்தனர், இது குறித்து பெற்றோர்கள் தெரிவிக்கையில் காணாமல் போன தனது மகள் 15 நாட்களுக்கு மேல் ஆகிய நிலையில் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய முத்துக்குமார் என்ற நபரை விசாரித்து, தங்கள் மகள் அபிநயாவை கண்டு பிடித்து தரவேண்டுமெனவும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu