பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த நபர் கைது
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி மாவட்டத்தில் லாட்டரி விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் மாலை ரோந்து அலுவலில் இருந்த போது அவருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் முனியாண்டி விலாஸ் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பெரம்பலூர் மாவட்டம், அரணாரை கிராமத்தைச் சேர்ந்த வேலு மகன் பார்த்திபன் (48/21), என்பவரை கைது செய்தார்.
அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த குயில் - 3 சீட்டு கட்டுகள், தங்கம்-7 சீட்டுகட்டுகள் மற்றும் நல்லநேரம் -5 சீட்டு கட்டுகள் ஆகியவற்றையும் பணம் ரூபாய் 400/- யும் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்தார். மேற்படி நபரை பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu