பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் லேப்டாப் திருடியவர் கைது

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் லேப்டாப் திருடியவர் கைது
X
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணி வைத்திருந்த லேப்டாப் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் யோகேஷ்வரன். இவர் 12.09.2021-ம் தேதி கல்லூரி செல்வதற்காக புறப்பட்டு சென்னை -திருச்சி பஸ்சில் ஏறினார்.இரவு 09.30 மணிக்கு பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் தனது இருக்கையில் லேப்டாப்பை பையுடன் வைத்துவிட்டு, டீ குடிக்க இறங்கினார். டீ குடித்து விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது லேப்டாப் பையை காணவில்லை.

இதுபற்றி யோகேஷ்வரன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைப் பெற்ற பெரம்பலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனிச்சாமி துரிதமாக செயல்பட்டு புதிய பஸ் நிலையம் சென்று பார்க்கும்போது அங்கு லேப்டாப் பையுடன் ஒருவர் தனியாக நிற்பதை கண்ட உதவி ஆய்வாளர் அவரிடம் விசாரிக்க அவர் மேற்படி பஸ்சில் திருடியதை ஒப்புக் கொண்டார். அவரது மோதி வயது (41), இவர் திருச்சி மாவட்டம் புங்கனூரை சேர்ந்தவர் ஆவார்.

மோதியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த லேப்டாப்பை பறிமுதல் செய்து யோகேஷ்வரனிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட மோதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்