பெரம்பலூர்-கேந்திரிய வித்யாலயா பள்ளி தற்காலிக ஆசிரியர் பணிக்கு நேர்முகத் தேர்வு .
பெரம்பலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி
பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பகுதி நேர தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு இம்மாதம் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.
முதுகலை, இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள்,ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், மனநல, யோகா, இசை, கைவினை கலை பயிற்சியாளர்கள், மருத்துவர், செவிலியர் போன்ற அனைத்து பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் நேர்முகத் தேர்வு மூலமாக நடத்தப்படும்.
நிரந்தரப் பணியாளர்கள் விடுப்பு மற்றும் ஏனைய காரணங்களால், காலிப்பணியிடத்திற்கான தற்காலிக வாய்ப்பு ஏற்படும் சமயத்தில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி வாய்ப்பு தற்காலிகமாக வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் www.perambalur.kvs.ac.in என்ற இணையதளங்களை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கடபிரியா, தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu