புகார் வந்த அரை மணிநேரத்த்தில் சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்
பெண்கள் உதவி மையத்தின் மூலம் புகார் வந்த அரைமணி நேரத்திற்குள் விரைவாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் உள்பட நான்கு பேருக்கு வெகுமதி வழங்கி திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு தெரிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் மேற்படி உதவி மையத்தினை பெண்கள் தொடர்பு கொள்ள 181 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்நிலையில் கடந்த 09.07.2021-ம் தேதி பெண்கள் உதவி மையத்திலிருந்து வரப்பட்ட புகாரை பெற்ற குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு த.கா-1647 சுகன்யா மற்றும் பெரம்பலூர் காவல் நிலைய மு.நி.கா-1408 சுமா ஆகியோர் சம்பவ இடமான நாவலூருக்கு விரைந்து சென்று ஒரு வயது குழந்தையை தாயிடம் கொடுக்க மறுத்த கணவரிடமிருந்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
பெண்கள் உதவி மையத்திற்கு வந்த புகாரை பெற்ற அரை மணிநேரத்திற்குள் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசித்ரா மற்றும் த.கா-184 பார்வதி ஆகியோர் சம்பவ இடமான பெரம்பலூர் தீரன் நகருக்கு விரைந்து சென்று அங்கு குடிபோதையில் பெற்ற மகளை அடித்த தந்தையிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர். மேற்கண்ட புகார்களை பெற்று சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசித்ரா, பார்வதி, சுகன்யா மற்றும் சுமா ஆகியோர்களின் பணியை திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் கவனித்தும் அவர்களது பணியினை பாரட்டும் வகையில் மேற்படி நபர்களை நேரில் அழைத்து நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி பாராட்டினார். மேலும் இனி வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக மக்கள் சேவையை சிறப்பாக செய்வதற்கு உற்சாகமூட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu