பெரம்பலூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வீடாக சென்று ஆய்வு

பெரம்பலூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வீடாக சென்று  ஆய்வு
X

பெரம்பலூர் குடிசை மாற்று வரிய குடியிருப்பில் வீடு, வீடாக சென்று கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு செய்தனர்.

குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வீடு, வீடாக சென்று கலெக்டர் ஸ்ரீவெங்கடப்ரிய, எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பெரம்பலூர் துறைமங்கலத்தில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பழுது ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்ரியா நேற்று சம்மந்தப்பட்ட குடியிருப்பில் வீடுவீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் குறைகள் கண்டறியப்பட்டதாகவும் அதனை சீர்செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


அதன்படி இன்று குடிசைமாற்று வாரிய அதிகாரிகளும்,கட்டிட பணியாளார்களும் சீர் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர்.

19 வது ப்ளாக்கில் நடைபெற்ற சீர்செய்யும் பணியை குடியிருப்புவாசிகள் தடுத்திநிறுத்தினர். நாங்கள் பழுது குறித்து ஏப்ரல் மாதமே புகார் தெரிவித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி கேட்டனர்.

சீரமைப்பு பணிகளை தடுத்துநிறுத்தியதுடன் நாங்கள் கடன்வாங்கி பழுதை சீர் செய்துள்ளோம் என்றும் அதற்கு பதில் கூறும் வரை பணிகளை தொடங்ககூடாது என்றுமுறையிட்டனர்.

இந்த நிலையில் இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்ரியா ஆய்வு மேற்கொண்டார்.அவருடன் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனும் வந்திருந்து வீடுவீடாக சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

குறைகளை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உறுதியளித்தார்.

Tags

Next Story