இந்து முன்னணி திருச்சி கோட்ட பொறுப்பாளருக்கு கொலை மிரட்டல்

இந்து முன்னணி திருச்சி கோட்ட பொறுப்பாளருக்கு கொலை மிரட்டல்
X
திருச்சி கோட்ட இந்து முன்னணி பொறுப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தது யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இந்து சாமி சிலைகளை மற்றும் ஆலயங்களை உடைக்கப்படுவதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை பெரம்பலூர் காந்திசிலை அருகில் நடைபெற உள்ளது. இதில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா மற்றும் இந்து முன்னணி மாநில செயலாளர் சுனில் குமார் போன்ற முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர் .

இதனையொட்டி பெரம்பலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பினர் துண்டுப் பிரசுரங்கள் சுவரொட்டிகள் ஒட்டி இந்து சொந்தங்களே வாருங்கள் என கேட்டுக்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் நடத்தக்கூடாது எனஇந்து முன்னணியின் திருச்சி கோட்ட பொறுப்பாளராக உள்ள குணசேகரன் என்பவர் எண்ணிற்கு மர்ம நபர் மூலம் தொலைபேசி வாயிலாக பெட்ரோல் வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாகவும், மேலும் நாளை இந்து முன்னணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது எனவும் கொலை மிரட்டல் விடுத்து பேசி உள்ளார்.

இதனையடுத்து பெரம்பலூர் மற்றும் அரும்பாவூர், காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்