11 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
11ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பெண் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் நெகிழ்ச்சியான நிகழ்ச்சி பெரம்பலூர் தாலுக்கா காவல் நிலையத்தில் நடைபெற்றது.
பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் 11 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பெரம்பலூர் தீரன் நகர் பகுதியில் உள்ள வேலா கருணை இல்லம். இந்த கருணை இல்லத்தில் 100க்கும் மேற்பட்ட மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த லஷ்மி என்ற பெண் 11 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளிய வந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது குடும்பத்துடன் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் தாகீரா கூறியதாவது.
வேலா கருணை இல்லத்தில் இருந்து கடந்த 1 மாதத்திற்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் லஷ்மி என்பவருடைய தகவல் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து தெலுங்கானா மாநில காவல்துறையை தொடர்பு கொண்டு அவரது புகைப்படம் மற்றும் விவரங்கள் சேகரிக்கப்பட்டதில்
இப்பெண் தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்தவர் என்றும் அவரது கணவரிடம் தொடர்பு கொண்டு அழைத்து செல்கீறார்களா என்று கேட்டதற்கு அழைத்து செல்கிறேன் என்று கூறியதால்,
பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதாஅருண்குமார், முன்னிலையில் காணாமல் போன , மன நலம் பாதிக்கப்பட்ட லஷ்மி என்ற பெண் அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மேலும் 11 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளிய வந்த நிலையில் 6 ஆண்டுகாலமாக கருணை இல்லத்தில் இருந்தது குறிப்பிடதக்கது. நெகிழ்ச்சியான இச்சம்பவம் பெரம்பலூர் காவல் நிலையத்தில் நடந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu