பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 193 மனுக்கள்

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 193 மனுக்கள்
X

பெரம்பலூர் மாவட்டத்தில்; மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா  தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 193 மனுக்கள் பெறப்பட்டன.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 193 மனுக்கள் பெறப்பட்டன.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 193 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) அ. லலிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ம.பாரதிதாசன், தனித்துணை ஆட்சியர் (சபாதி) எஸ்.சரவணன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!