பெரம்பலூர் அருகே மீன்பிடிப்பதில் தகராறு, 7 டூவீலர்கள் தீ வைத்து எரிப்பு, போலீஸ் குவிப்பு, பதற்றம் பரபரப்பு
பெரம்பலூர் அருகே மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 7 டூவீலர்கள் எரிந்து சேதம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய ஏரியில் மீன்பிடிக்க அரும்பாவூர், அ.மேட்டூர், தழுதாழை, தொண்டைமான் துறை, பெரியம்மாபாளையம், பூலாம்பாடி, வெங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் மீன் பிடிக்க இன்று காலை திரண்டு உள்ளனர்.
இந்நிலையில் அந்த ஏரி மீனவர்கள் சங்கத்தின் சார்பில் குத்தகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளதால் மீனவர்களுக்கும், மீன் பிடிக்க வந்த பொது மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்ததில் 7 வண்டிகள் எரிந்து நாசமானது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினரையும் கலைந்து போக அறிவித்தனர்.
மீறியும் மக்கள் கூட்டம் கூடியதால் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து விரட்டியடித்தனர். பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருவதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க பெரம்பலூரில் இருந்து ஆயுதப் படை, அதிவிரைவு படைகளில் இருந்து அதிகமான ஆயுதம் ஏந்திய போலீசார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டு உள்ளனர்.
அரும்பாவூர் வழியாக செல்லும் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்திற்கு காரணமானவர்ளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இச் சம்பவம் குறித்து மாட்ட காவல்கண்கானிப்பு அலுவலர் ச.மணி நேரில் சென்று விசாரனை நடத்திவருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu