பெரம்பலூரில் மதுவை மறந்து வாழ்வோரின் ஆலோசனை கூட்டம்
மது மறந்து வாழும் நபர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின் படி பெரம்பலூர் மாவட்டத்தில் மது மறந்து வாழ்வோர் மையத்தினை பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா (மதுவிலக்கு அமலாக்க பிரிவு) புதிய பாதை என்ற அமைப்புடன் இணைந்து நேரில் சென்று பார்வையிட்டனர்.
பின்னர் அவர்களிடம் பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அங்குள்ள நபர்களுக்கு முதலில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஏனென்றால் இது உங்களது புதிய வாழ்வு என்பதை நீங்கள் உணரந்துவிட்டீர்கள் என கூறினார். மேலும் மதுவின் தீமை குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தங்கள் பகுதியில் ஏதேனும் சட்ட விரோதமாக நாட்டு சாராயம் காய்ச்சுதல் விற்பணை செய்தல் போன்ற செயல்கள் நடைப்பெற்றால் 10581 என்ற இலவச தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu