பெரம்பலூர்: 7,136 நபர்களுக்கு சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர்: 7,136 நபர்களுக்கு சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி
X
பெரம்பலூர் மாவட்டத்தில் 7,136 நபர்களுக்கு சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கலெக்டர் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திடும் வகையில் பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 500 க்கும் மேற்பட்ட நபர்கள் பொது மக்களை ஒருங்கிணைத்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தகுதி வாய்ந்த அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி அவரவர்தம் வசிக்கும் பகுதிகளிலேயே எளிதில் கிடைத்திடும் வகையில் வாரம்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தமிழக அரசின் உத்தரவின்படி நடத்தப்பட்டு வருகிறது. இதர நாட்களிலும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 18வது கட்டமாக 190 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள், இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு 84 நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் விதமாக பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 2,360 நபர்களுக்கும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 1,438 நபர்களுக்கும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 1,675 நபர்களுக்கும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 1,663 நபர்களுக்கும் என பெரம்பலுர் மாவட்டத்தில் மொத்தம் 7,136 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும், கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக நமது பெரம்பலூர் மாவட்டத்தை உருவாக்கவும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil