பெரம்பலூரில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்
X

பெரம்பலூரில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூரில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக 6 வருடமாக ஒப்பந்த முறையில் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சகுந்தலா தலைமை தாங்கினார்.இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை பெருந்திரள் முறையீடு மாநில அளவில் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ஜெயசித்ரா, மாவட்ட செயலாளர் ஆனந்த், மாவட்ட பொருளாளர் மஞ்சுளா,

மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் குமரி அனந்தன், மாவட்ட செயலாளர் இளங்கோவன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பாரதிவளவன், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சிவகுமார், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது