பெரம்பலூர் நகராட்சி மூலம் நடைபெற்று வரும் பணிகள் கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் நகராட்சி மூலம் நடைபெற்று வரும் பணிகள் கலெக்டர் ஆய்வு
X

பெரம்பலூர் நகராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் நகராட்சி மூலம் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் நகராட்சி துறைமங்கலம் நெடுவாசல் சாலையில் உள்ள உரக்கிடங்கில் பல ஆண்டுகளாக பழைய திடக்கழிவுப் பொருட்கள் சேகரம் செய்யப்பட்டது.

இந்த கழிவுகளை அகற்றி, உயிரி செயலாக்க முறையில் (Bio-Mining) பிளாஸ்டிக் திடக்கழிவுகள் பிரித்தெடுக்கும் பணி, பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், தினசரி கழிவு நீர் மற்றும் சுத்திகரிக்கப்படும் பணி.

நீர் தரம் பரிசோதனை செய்யப்பட்டு வருவதையும், மேலும் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் நீர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் மாதம்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட நீர் குறியீட்டு அளவிற்குள் உள்ளதை உறுதி செய்யப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.,

தொடர்ந்து நகராட்சியின் மூலம், நாளொன்றுக்கு சேகரிக்கப்படும் 18 மெட்ரிக் டன் மக்கும் மற்றும் மக்காத திடக்கழிவுகள் சேகரம் செய்யப்பட்டு நுண்ணுயிர் உரம் தயாரிப்பதற்காக திடக்கழிவுகள் அனுப்பப்பட்டு நுண் உரம் தயார் செய்யப்பட்டு வரும் பணிகள்,

மக்கும் திடக்கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நகராட்சி பகுதிகளில் உள்ள காய்கறி மற்றும் உணவு கழிவுகளை சேகரம் செய்து கரிம மீத்தேன் வாயு உற்பத்தி செய்யும் பணிகள் ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இவ்வாய்வின்போது நகராட்சி ஆணையாளர் ச.குமரிமன்னன், நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் துப்புரவு ஆய்வர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!