திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் திடீரென தீப்பிடித்து சேதம்

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் திடீரென தீப்பிடித்து சேதம்
X

பெரம்பலூர் அருகே தீப்பிடித்த காரின் தீயைக்கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர்

பெரம்பலூர் அருகே கார் திடீரென தீப்பிடித்ததில் புது மாப்பிள்ளையும் அவரது தாயாரும் அதிருஷ்டவசமாக உயிர்தப்பினர்

பெரம்பலூர் அருகே கார் திடீரென தீப்பிடித்ததில் புது மாப்பிள்ளையும் அவரது தாயாரும் அதிருஷ்டவசமாக உயிர்தப்பினர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேலகம்பேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (33). இவரது தாயார் மாரியம்மாள்(70) . தண்டபாணிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 9-ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது. திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக, நண்பர் குமரேசன் காரை எடுத்து கொண்டு தனது தாயாருடன் கரூரில் இருந்து பெரம்பலூர் வழியாக விருத்தாசலத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். இன்று மாலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.



இதனை பார்த்த தண்டபாணி, காரை சாலை ஓரமாக நிறுத்தியவுடன் அவரது தாயாரும் காரை விட்டு இறங்கியுள்ளனர். அடுத்த சில நொடிகளில் கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.

தண்டபாணியும், அவரது தாயாரும் காரை விட்டு இறங்கியதால் அவர்கள் காயம் ஏதுமின்றி அதிருஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த சம்பவத்தினால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த கார் தீப்பற்றியது எப்படி என்பது விபத்து குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!