பெரம்பலூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

பெரம்பலூர் அருகே பட்டபகலில் பூட்டை உடைத்து நகை,பணத்தை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமம் 1வது வார்டு மேற்கு தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ் மகன் சதீஷ் குமார்(41) விவசாயி. இவர் தன் மனைவி விஜி(31) தாயார் வளர்மதி மற்றும் பிள்ளைகளுடன் நேற்று காலை 8மணி அளவில் வழக்கம் போல் தனது வயலிற்கு சென்றுள்ளார் மீண்டும் மாலை 7மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் வாசல் கதவு தாழ்ப்பாள் பூட்டுடன் அறுந்து கிடந்தது.

பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்த சதீஷ்குமார் உள்ளே உள்ள மற்றொரு அறையின் கதவும் இதேபோன்று அறுக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த அறையில் உள்ள பீரோ கதவு திறந்த நிலையில் கிடந்தது . பீரோவை திறந்து பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 6சவரன் நகை மற்றும் 65,000/- ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது தகவலறிந்து வந்த பெரம்பலூர் நகர காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆராய்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!