ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடன்
பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த சிறு குறு விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TABCEDCO) மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக்கொள்ள அதிகபட்சம் ரூ.1.00 இலட்சம் வரை வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீத அரசு மானியம் அதிகபட்சம் ரூ.50,000 வரை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயன் பெற சாதி, இருப்பிடம், மற்றும் வருமான சான்றிதழ்கள், வட்டாட்சியரிடம் பெறப்பட்ட சிறு குறு விவசாயி சான்று, விண்ணப்பதாரரின் நில உடைமைக்கு ஆதாரமான கனிணி வழி பட்டா மற்றும் அடங்கல் நகல் ஆகியவற்றுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu