பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
X

பெரம்பலூர் அருகே விபத்தில் இறந்த வாலிபரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பலி.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மருதடி கிராமத்தை சேர்ந்த மருதமுத்து மகன் பிரவீன் குமார். திருவளக்குறிச்சியில் உள்ள தனியார் கிரஷரில் ஒட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருவளக்குறிச்சியிலிருந்து மருதடி செல்லும் போது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனிடையே விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க வேண்டும் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும். இப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், என்றும் சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!