பெரம்பலூர் அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து

பெரம்பலூர் அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து
X
பெரம்பலூர் அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து விழுந்தது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம்,காரை கிராமத்தில் தேவராஜ் மகன் பெரியசாமி(40), என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த துரைசாமி மகன் பிரபாகரன்(34), என்பவருக்கும் நீண்ட நாட்களகவே நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதே போல் நேற்று காலை நிலத்தில் வேலை செய்யும் போது இருவருக்கும் பிரச்சனை அதிகமாகி துரைசாமி மகன் பிரபாகரன் தேவராஜ் மகன் பெரியசாமியை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் பெரியசாமி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!