பெரம்பலூர் மாவட்டத்தில் +2 தேர்வில் 7,933 மாணவ, மாணவிகள் தேர்ச்சி: என மாவட்ட ஆட்சியர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் +2 தேர்வில் 7,933 மாணவ, மாணவிகள் தேர்ச்சி: என மாவட்ட ஆட்சியர்.
X

மாதிரி படம் 

பெரம்பலூர் மாவட்டத்தில் 7,933 மாணவ, மாணவிகள் +2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தகவல்.

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் கல்வி மாவட்டத்தில் 46 பள்ளிகளில் பயின்ற 2,522 மாணவர்களும், 2,644 மாணவிகளும், வேப்பூர் கல்வி மாவட்டத்தில் 28 பள்ளிகளில் பயின்ற 1,382 மாணவர்களும், 1,385 மாணவிகளும் என மொத்தம் 3,904 மாணவர்களும், 4029 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு 202-21ஆம் கல்வியாண்டில் அரசு ஆதி திராவிட அரசு உதவி பெறும் தனியார் மற்றும் சுயநிதி என 74 மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 3,904 மாணவர்கள் மற்றும் 4,029 மாணவிகள் என மொத்தம் 7,933 மாணவ, மாணவிகள் அனைவரும் (100 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story