100% வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
வண்ணகோலங்கள் வரைந்து விழிப்புணர்வு.
பெரம்பலூரில் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாகவும் 100% வாக்குப்பதிவு செய்திடவும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவர்கள் மற்றும் மகளிர் திட்டமும் இணைந்து வண்ணக்கோலமிடும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மகளிர் சுய உதவி குழுக்களில் இருந்து 58 பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பின்னர் இதில் பங்கேற்று வண்ணகோலமிட்ட அனைத்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் இராஜமோகன், உதவி திட்ட அலுவலர் கமல்ராஜ் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவர்கள் ஆகியோர் இணைந்து நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
பதாகையில் கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கையெழுத்து இயக்க பதாகையில் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அரசு அலுவலகள் மற்றும் வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் தவறாமல் வாக்காளிப்போம் என்பதை எடுத்துரைக்கும் விதமாக பதாகையில் கையொப்பம் இட்டு விழிப்புணர்வு செய்தனர்.
உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் வாக்காளர்கள் 100% வாக்குப்பதிவு செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu