பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலி பறிப்பு
X

பெரம்பலூரில் குப்பை கொட்ட வீட்டிலிருந்து சாலைக்கு வந்த பெண்ணிடமிருந்து 7 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

பெரம்பலூர் நகரில் உள்ள எளம்பலூர் சாலையில் வீட்டிலிருந்து சாலையோரம் குப்பை கொட்டுவதற்காக வந்த முத்துநகரை சேர்ந்த கவிதா என்ற பெண்மணி வந்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த சுமார் 7 சவரன் தங்க சங்கிலியை மோட்டார்பைக்கில் வந்த மர்ம நuர்கள் பறித்து விட்டு மின்னல் வேகத்தில் மாயமாய் மறைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!