பெரம்பலூர் அருகே அடுத்தடுத்து கொள்ளை

பெரம்பலூர் அருகே அடுத்தடுத்து கொள்ளை
X
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் நள்ளிரவில் அடுத்தடுத்து நடந்த கொள்ளையால் திருடர்கள் பயத்தில் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்காவில் கிராம புறங்களில் கொள்ளையர்கள் கைவரிசை அரிகரித்துள்ளது. வெங்கலம், கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை என ஒவ்வொரு கிராமத்திலும் இரவுநேரத்தில் தலா 5 க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை காட்டி வந்த கொள்ளையர்கள் நேற்று இரவும் கொள்ளை முயற்சில் ஈடுபட்டுள்ளனர்.


வேப்பந்தட்டை அருகேயுள்ள அன்னமங்கலம் கிராமத்தில் நேற்று இரவு வடக்கு தெரு, நடுத்தெரு ஆகிய இடங்களில் மதலைமேரி (53), தனசெல்வி, லூக்காஸ் (30), ராணி (60) ஆகியோரது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள், அந்தோனிசாமி வீட்டிலிருந்த உண்டியல் பணத்தை திருடிச் சென்றதோடு, வடக்குத்தெருவிலுள்ள பச்சையாம்மாள் என்பவரது வீட்டில் பணம் மற்றும் வெள்ளி கொளுசு ஆகிய பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் அரும்பாவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்த நாட்களில் தொடரும் கொள்ளை சம்பவத்தால் வேப்பந்தட்டை பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திலுள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!