சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிஐடியு  தொழிற்சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம்
X
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து பெரம்பலூரில் CITU தொழிற்சங்கத்தினர் ஆட்டோவில் கயறு கட்டி இழுத்து நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருதனால், மோட்டார் வாகன தொழில் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் சரக்கு வாகனங்களின் கட்டணமும் உயர்ந்து வருவதால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் ஏழை நடுத்தர மக்கள் பெரும் பாதிப்படைந்து உள்ளனர். மேலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளதால் தாராள செலவு செய்யும் குடும்பதார் தொடங்கி மாத பட்ஜட் போடும் குடும்பத்தாருக்கும் மாத பட்ஜட்டில் துண்டு விழுந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாடத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஆட்டோவை கயறு கட்டி சாலையில் இழுத்தும் நூதன முறையில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்பாட்டம் செய்து முழக்கமிட்டனர்.

Tags

Next Story
ai in future agriculture