பெரம்பலூர்: பேரளி ஊராட்சி மருவத்தூர் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

பெரம்பலூர்: பேரளி ஊராட்சி மருவத்தூர் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
X

பேரளி ஊராட்சியில் மருவத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி செந்தில்குமார் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

மருவத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி செந்தில்குமார் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பேரளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி செந்தில்குமார் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் மருவத்தூர் கிராமத்தில் உள்ளஅரசு ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக வேப்பூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலெட்சுமி கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இராமசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் மணிகண்டன், வார்டு உறுப்பினர்கள் சீதா கதிரவன், ராஜ்குமார், சகுந்தலா குணசேகரன். ஊராட்சி செயலாளர் செல்வம், மற்றும் ஊராட்சி பணியாளர்கள் அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சமுதாயக் கூடம் அமைத்தல், மகளிர் சுகாதார வளாகம் அமைத்தல், புதிய சாலை அமைத்தல் .வடிகால் வாய்க்கால் சீர் செய்தல். மேலும் 2022 முதல் 2023 ஆண்டுக்கான மகாத்துமா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!