பெரம்பலூர் அருகே சஞ்சீவிராயர் தூண் நிறுவப்பட்டவுடன் நாட்டை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இல்லாமல் போகுமாம்

பெரம்பலூர் அருகே சஞ்சீவிராயர் தூண் நிறுவப்பட்டவுடன் நாட்டை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இல்லாமல் போகுமாம்
X

சஞ்சீவிராயர்  கல்தூண்

பெரம்பலூர் அருகே  திருமூலிகை மலையடிவாரத்தில் ஒரே கல்லில் வெவ்வேறு உருவங்களில் ஆன 108 ஆஞ்சநேயர் சிற்பங்களுடன் கூடிய சஞ்சீவிராயர் தூண் நிறுவப்பட்டவுடன் கொரோனா வைரஸ் நாட்டை விட்டு ஓடிவிடும் என்று கல்தூண் நிறுவும் ராமானுஜம் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் திருப்பெயர் கிராமத்தில் அமைந்துள்ள பச்சைமலை தொடர்ச்சியில் மலைக்குன்று உள்ளது. இந்த மலையில் மூலிகைகள் நிறைந்துள்ள காரணத்தில் இந்த மலையை திருமூலிகை மலை என்று அழைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இந்த குன்றின் மேல் முருகன், கோயில் ஒன்றும் அதன் எதிரே சஞ்சீவிராயர் என்ற பெயரில் ஆஞ்சநேயர் கோயிலும் உள்ளது. பழங்காலத்தில் முனிவர் ஒருவர் இந்த மலையில் தங்கி தன்னை தேடி வரும் நோயாளிகளுக்கு மூலிகை மருந்து கொடுத்து நோய் தீர்த்து வந்தார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் திருச்சியை சேர்ந்த இராமானுஜம் என்பவர் திருமூலிகை மலையடிவாரத்தில் 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை ஒன்றை நிறுவ முடிவு செய்து கிராம மக்கள் ஒத்துழைப்புடன் சென்ற ஆண்டு தொடக்கத்தில் பணியை தொடங்கியுள்ளார்.

இதற்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலிருந்து தகுதியான கருங்கல் தேர்வு செய்யப்பட்டு கிரேன்கள் மூலம் லாரியில் ஏற்றி நாகலாபுரம் கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்குள்ள சிற்ப கூடத்தில் சிலை வடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ரூ.11 லட்சம் மதிப்பில் 22 டன் எடையும் 16 அடி சுற்றளவும் கொண்ட 12 அடி உயரமுள்ள சதுர வடிவ தூணின் 4 புறமும் தலா 27 ஆஞ்சனேயர் உருவங்கள் அமையும் வன்னம் வடிவமைக்கப்பட்டு வரும் இந்த சஞ்சீவிராயர் தூண் இன்னும் சில நாட்களில் பெரம்பலூர் அருகேயுள்ள திருமூலிகை மலையடிவாரத்தில் நிறுவப்படவுள்ளதால்

இதற்காக சுமார் 10 டன் எடை கொண்ட கருங்கற்களை கொண்டு 6 அடி உயர அடி பீடம் அமைக்கப்படவுள்ளது.

ஒரே கல்லில் 108 ஆஞ்சிநேயர் சிற்பங்கள் பொறித்த கல்தூண் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத நிலையில் இந்த தூண் நிறுவப்பட்ட பிறகு இந்த தூணினை ஒரு முறை வலம் வந்தால் போதும் 108 திவ்ய தேசம் சென்று திரும்பிய பலன் பக்தர்களுக்கு கிட்டும் என்று கூறும் இதன் நிறுவனர் இராமானுஜம் இந்த சஞ்சீவராயர் நோய் தீர்த்து உயிர் கொடுப்பவர் என்பது ஐதிகம் என்பதால் 108 சிற்பத்துடனான இந்த சஞ்சீவிராயர் தூண் நிறுவப்பட்டவுடன் நாட்டை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இல்லாமல் போகும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!