பெரம்பலூரில் சலூன் கடைகள், டீக்கடைகள் சமூக இடைவெளியோடு செயல்பட துவங்கியது

பெரம்பலூரில் சலூன் கடைகள், டீக்கடைகள் சமூக இடைவெளியோடு செயல்பட துவங்கியது
X

பெரம்பலூரில் அரசின் ஊரடங்கு விதிமுறைகள் படி இன்று காலை முதல் செயல்பட துவங்கிய சலூன் கடை.

கொரோனோ தொற்று ஊரடங்கில் இன்று முதல் சலூன் கடைகள் மற்றும் டீக்கடைகள் இயங்கலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்து பெரம்பலூரில் கடைகள் திறக்கப்பட்டது.

கொரோனோ தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக தளர்வற்ற முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு இருந்தது.

இதனைத்தொடர்ந்து தொற்று பரவல் அதிகமாக உள்ள சில மாவட்டங்களை தவிர மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் சலூன் கடைகளும், டீக்கடைகளும் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து பெரம்பலூரில் குறைந்த அளவு வாடிக்கையாளர்களுடன், முறையாக சமுக இடைவெளி மற்றும் சுகாதாரத்துறையின் அறிவுருத்தலை பின்பற்றி சலூன் கடைகள் திறக்கப்பட்டன.

அதேபோல, டீக்கடைகளும் திறக்கப்பட்டு பார்சல் மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்புடன் திறக்கப்பட்டுள்ளது.இதனால் சலூன் கடை மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

Tags

Next Story