/* */

பெரம்பலூரில் தூய்மை பணியில் அவுட்சோர்சிங் முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில், தூய்மை பணியில் அவுட்சோர்சிங் முறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் தூய்மை பணியில் அவுட்சோர்சிங் முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

பெரம்பலூரில், கண்டன ஆர்ப்பாட்டம் செய்த தொழிற்சங்கத்தினர். 

சிஐடியு உடன் இணைவு பெற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், பெரம்பலூர்புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் பொன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நகராட்சிகளில் தூய்மை பணி உள்ளிட்ட அடிப்படை பணிகளை தனியார் அவுட்சோர்சிங் மூலம் நிறைவேற்றும் உத்தரவை கைவிட வேண்டும், தூய்மை பணியாளர்களை ஆட்குறைப்பு செய்து குப்பைகளை தேங்க விடக்கூடாது , குறைந்தபட்ச ஊதிய அரசாணைக்கு மாறாக ஊதியத்தை குறைக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து, கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின், மாவட்ட பொருளாளர் சிற்றம்பலம், மாவட்ட துணைத்தலைவர்கள் ரங்கராஜ், சிவானந்தம், மாவட்ட துணைச் செயலாளர் ரெங்கநாதன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மணிமேகலை உள்ளிட்ட நகராட்சிபணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Jan 2022 1:00 AM GMT

Related News