பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா

பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா
X

பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 231 தூய்மை பணியாளர்களுக்கு, கடந்த 52 வாரத்திற்கும் மேலாக பிராவிடண்ட் பண்ட் என்கிற ஈபிஎப் தொகை மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து கொள்கின்றனர்.ஆனால் அதை கணக்கில் காட்டப்படாமல் உள்ளது, இது தொடர்பாக பலமுறை நகராட்சி ஆணையர், மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஒப்பந்த நிர்வாகம் நிலுவைத் தொகை நபர் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 400 ரூபாய் பாக்கி வைத்து உள்ளது.

இதில் நகராட்சியில் பணிபுரியும் மொத்தம் 231 தூய்மை பணியாளர்களின் மொத்த தொகையான 3 கோடியே 24 லட்சத்து 32 ஆயிரத்து 400 ரூபாய் மோசடி செய்ததாக தெரிய வருகிறது. இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டால் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

எனவே தூய்மைப் பணியாளர்களின் இந்த ஈ.பி.எப். தொகையை கணக்கில் வரவு வைக்க வேண்டும், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக மாவட்ட ஆட்சியர் அறிவித்த 580 ரூபாய் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பணிப்புறக்க ணிப்பு செய்த, தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு, கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், ஒப்பந்ததாரர்கள் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!