பெரம்பலூர் நகராட்சி தேர்தல்: 1-வது வார்டு தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு

பெரம்பலூர் நகராட்சி தேர்தல்: 1-வது வார்டு தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு
X

பெரம்பலூர் நகராட்சி 1- வது வார்டில் தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

பெரம்பலூர் நகராட்சி தேர்தலையொட்டி, 1-வது வார்டில் தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

பெரம்பலூர் நகராட்சி தேர்தலில் 1-வது வார்டில் தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை, மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி,டாக்டர் செ.வல்லபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ம.ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர் எஸ் அண்ணாதூரை மற்றும் பாரி(எ)அப்துல்பாரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தளபதி மு.க..ஸ்டாலின் தலைமையில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் எப்படி மிகப்பெரிய வெற்றி கிடைத்ததோ அதேபோல் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.மற்றும் கூட்டணிக்கட்சிகள் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!