பெரம்பலூர் ம.தி.மு.க. வேட்பாளருக்கு சின்னப்பா எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு

பெரம்பலூர் ம.தி.மு.க. வேட்பாளருக்கு  சின்னப்பா எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு
X

பெரம்பலூர் ம.தி.மு.க. வேட்பாளருக்கு சின்னப்பா எம்.எல்.ஏ. ஆதரவு திரட்டினார்.

பெரம்பலூர் ம.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக சின்னப்பா எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

நகர்மன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19ஆம் தேதி நடைபெற இருப்பதால் அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் வேகம் காட்டி வருகின்றனர் அந்தவகையில் பெரம்பலூர் நகர மன்றத் தேர்தலில் 10வது வார்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ம.தி.மு.க.வேட்பாளர் ஜெயசீலன் இன்று 10வது வார்டு பகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார்.

இதில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ம.தி.மு.க. வேட்பாளர் ஜெயசீலன் அருமையான நண்பர் உங்கள் வீட்டுப்பிள்ளை அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் உங்கள் பகுதியில் இருக்கும் சாலை வசதிகளையும் குடிநீர் பிரச்சினைகளையும் மின்விளக்கு பிரச்சினைகளையும் உடனடியாக தீர்த்து வைப்பார். எந்த நேரத்திலும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர் ஜெயசீலன் அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture