ஊரடங்கு நேரத்தில் உணவை தயார் செய்து வழங்கும் பெரம்பலூர் தீயணைப்பு துறையினர்

ஊரடங்கு நேரத்தில் உணவை தயார் செய்து வழங்கும் பெரம்பலூர் தீயணைப்பு துறையினர்
X

பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் உணவு தயாரித்து ஆதரவற்றோருக்கு வழங்கி வருகின்றனர்.

பெரம்பலூர் தீயணைப்பு துறையினர் ஊரடங்கு காலத்தில் உணவு தயார் செய்து ஆதரவற்றோருக்கு வழங்கி வருகின்றனர்.

பெரம்பலூர் அடுத்துள்ள துறைமங்கலம் பகுதியில் இருக்கும் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தில், ஊரடங்கு நேரத்தில் உணவின்றி தவிக்கும் ஏழை எளியோர்க்கும் மற்றும் கருணை இல்லத்திற்கும், உணவுகளை தயார் செய்து இலவசமாக வழங்கி வரும் உன்னதமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர்,

அதன்படி இன்று பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தில் தரமான உணவுகளை தீயணைப்பு வீரர்கள் தயார் செய்து, உணவின்றி தவிக்கும் ஏழை எளியோர்க்கும், வேலா கருணை இல்லத்தில் 100க்கும் மேற்பட்டோர் பயன்பெறும் வகையில் உணவுகளை வழங்கினர்.

பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தங்களது சொந்த செலவில் உணவுகளை தயார் செய்து வழங்கி வருகின்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!